Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபுதேவா ரகசியமாக திருமணம் செய்துகொண்டாரா? வெளியான ரகசியம்!

Advertiesment
பிரபுதேவா ரகசியமாக திருமணம் செய்துகொண்டாரா? வெளியான ரகசியம்!
, வியாழன், 19 நவம்பர் 2020 (15:44 IST)
நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகராகவும் நடன இயக்குனராகவும் அறியப்பட்ட பிரபுதேவா, ரமலத் என்ற டான்ஸரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவருக்கு திருமணம் ஆனதே 10 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் வெளி உலகுக்கு தெரியப்படுத்தினார். அவர்களுக்கு மூன்று மகன்கள் இருந்தனர். இந்நிலையில் வில்லு படத்தின் உருவாக்கத்தின் போது நயன்தாராவுடன் காதல் ஏற்பட்டதால் ரமலத்துடனான உறவை முறித்துக் கொண்டார்.

பின்னர் நயன்தாராவுடனும் காதல் முறிவு ஏற்பட்டு அவர் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தனது முதுகுவலி பிரச்சனைக்காக சிகிச்சை மேற்கொண்ட அவர் அப்போது சிகிச்சை அளித்த மருத்துவருடன் காதல் வயப்பட்டதாகவும், அதையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் எளிமையாக வீட்டிலேயே திருமணம் செய்துகொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த அடக்கம் ஒடுக்கம் பிடிச்சிருக்கு... அப்பப்போ இப்படி வந்திட்டு போங்க ஷாலு ஷம்மு!