Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சவுதி தாக்குதல் எதிரொலி: சரிந்த உற்பத்தி; 20% வரை உயரும் பெட்ரோல் - டீசல் விலை!

சவுதி தாக்குதல் எதிரொலி: சரிந்த உற்பத்தி; 20% வரை உயரும் பெட்ரோல் - டீசல் விலை!
, திங்கள், 16 செப்டம்பர் 2019 (10:53 IST)
சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலை மீது அடத்தப்பட்ட தாக்குதலால், கச்சா எண்ணெய் விலை உயரும் என தெரிகிறது. 
 
சவுதி அரேபியாவில் உள்ள புக்கியாக் நகரில் இருக்கும் அரம்கோ நிறுவனத்தின் அப்குயிக் (Abqaiq) ஆலை மற்றும் குராய்ஸ் எண்ணெய் வயலிலும் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. 
 
சர்வதேச அளவி சவுதி அரேபியாதான் அதிகளவு கச்ச எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது. குறிப்பாக நாள் ஒன்றிற்கு உலகின் மற்ற நாடுகளுக்கு சவுதி 98 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்கிறது. 
webdunia
மொத்த எண்ணெய் வள் நாடுகளில் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு சவுதி அரேபியாவில் இருந்துதான் நடைபெறுகிறது. உலகநாடுகளில் சவுதியிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமது செய்வதில் இந்தியாவும் ஒன்று. 
 
இந்நிலையில், தாக்குதல் நடத்தப்பட்ட இந்த ஆலைதான் உலகிலேயே மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலை என்பது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு சுமார் 7 மில்லியன் லிட்டர் எண்ணெய் அங்கு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. 
webdunia
இந்த ஆலையின் மீதான தாக்குதலால் உற்பத்தி பாதியாக குறைந்துள்ளதாம். எனவே, கச்சா எண்ணெய்யின் விலை 20% வரை அதிகரிக்க கூடுமாம். அப்படி கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், பெட்ரோ மற்றும் டீசல் விலையும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதோடு ஏமன் நாட்டின் அதிபர் மன்சூர் ஹைதியை எதிர்த்து ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படை போரிட்டு வருகிறது. மன்சூர் கைதிக்கு சவுதி ஆதரவாக செயல்பட்டு வருவதால் ஹவுத்தி கிளர்ச்சிப் படை இந்த தாக்குதலை நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாட்டு வண்டிக்கு மோட்டர் வாகன சட்டப்படி அபராதம்: டிராபிக் போலீஸ் அட்ராசிட்டி!