Publish Date: Fri, 09 Aug 2019 (20:39 IST)
Updated Date: Fri, 09 Aug 2019 (20:47 IST)
ஹெல்மெட் அணியவில்லை என்றால் இனி பெட்ரோல் கிடையாது என பெட்ரோல் உரிமையாளர்கள் சங்கம் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் கிடையாது என வடசென்னை பெட்ரோல் பல்க் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடந்த போக்குவரத்து போலீஸார், பெட்ரோல் உரிமையாளர் சங்க ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து 68 பெட்ரோல் பல்குகளில் ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் கிடையாது என அறிவித்துள்ளது. மத்திய அரசு புதிய வாகன சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியிருக்கும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.