Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாராளுமன்றத்தில் பேச வேண்டியதை ஃபேஸ்புக்கில் பேசிய சச்சின்

Advertiesment
பாராளுமன்றத்தில் பேச வேண்டியதை ஃபேஸ்புக்கில் பேசிய சச்சின்
, சனி, 23 டிசம்பர் 2017 (00:29 IST)
பாராளுமன்றத்தில் மிகவும் குறைவாக பேசிய எம்பிக்களின் பட்டியலில் சச்சின் தெண்டுல்கரின் பெயரும் உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று சச்சின் அபூர்வமாக பேச எழுந்தபோது காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் தொடர்ந்து ஏற்படுத்திய அமளியால் அவர் பேசுவது தடைபட்டது.

இந்த நிலையில் ராஜ்யசபாவில் என்ன பேச வேண்டும் என்று குறிப்புகள் எடுத்து வைத்திருந்தாரோ, அதை தனது ஃபேஸ்புக்கில் பேசியுள்ளார் சச்சின் தெண்டுல்கர். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

விளையாட்டை விரும்பும் இந்தியாவை, விளையாட்டை திறம்பட விளையாடும் இந்தியாவாக மாற்றுவதே எனது இலக்கு. பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, உணவு பாதுகாப்பு, சுகாதாரம் என பல்வேறு  விஷயங்களில் நாடு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதேபோல் ஒரு விளையாட்டு வீரராக  விளையாட்டு துறையிலும் இந்தியா பெற வேண்டிய மேம்பாடு மற்றும் மக்களின் ஆரோக்கியம் குறித்து நான் கவனம் செலுத்துகிறேன்

சுகாதாரமான, ஆரோக்கியமான இந்தியா உருவாக வேண்டும் என்பதே எனது கனவு. கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது போல் விளையாட்டு உரிமைச் சட்டத்தைக் கொண்டுவ வரவேண்டும் என்பதே எனது கோரிக்கை' என்று சச்சின் தெண்டுல்கர் பேசினார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெ மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் பதவிக் காலம் 6 மாதம் நீட்டிப்பு