Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாராளுமன்றத்தை அப்படியே தெனிந்தியாவுக்கு மாத்துங்க.... நவநீதகிருஷ்ணன் கோரிக்கை!!

Advertiesment
பாராளுமன்றத்தை அப்படியே தெனிந்தியாவுக்கு மாத்துங்க.... நவநீதகிருஷ்ணன் கோரிக்கை!!
, வெள்ளி, 29 டிசம்பர் 2017 (19:16 IST)
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் டெல்லியில் ஏற்படும் காற்று மாசு தொடர்பாக டெல்லி மேல் சபையில் குறுகிய நேர விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கனிமொழி, டி.ராஜா, நவநீதகிருஷ்ணன் பங்கேற்று பேசினர்.
 
அப்போது நவநீதகிருஷ்ணன் பின்வருமாறு பேசினார், டெல்லியில் ஒவ்வொரு வரும் வசிப்பதற்கு அச்சப்படுகிறார்கள். மனிதர்கள் நீண்ட காலம் உடல் தகுதியுடன் வசிக்க முடியாத அளவுக்கு இங்கு காற்றுமாசு உருவாகி வருகிறது. 
 
வாழ்ய்ம் இடத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த சுப்ரீம் கோர்ட்டும், தேசிய பசுமை தீர்ப்பாயமும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன. காற்று மாசுவை கட்டுப்படுத்த அனைவரும் பொது போக்குவரத்தை பயன்படுத்த தொடங்க வேண்டும்.
 
பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தால் பாராளுமன்ற கூட்டத்தை தென் இந்தியாவுக்கு மாற்றலாம் என்று நினைக்கிறேன். இதனால் நமது வட இந்திய நண்பர்கள் காற்று மாசு இல்லாமல் நல்ல தட்ப வெப்ப நிலையை பெற இயலும் என அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர்களாக இருக்கிற தாறுமாறுகள்: வச்சு செய்யும் நாஞ்சில் சம்பத்!