Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பார்சல் திருடனை கண்டுபிடிக்க அமேசான் புது யுக்தி!

Advertiesment
பார்சல் திருடனை கண்டுபிடிக்க அமேசான் புது யுக்தி!
, செவ்வாய், 18 டிசம்பர் 2018 (21:04 IST)
அமெரிக்காவில் வீட்டுக்கு வெளியே வைக்கப்படும் பார்சலை திருடுபவர்களை கண்டறிய காவல்துறையுடன் இணைந்து ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளது அமேசான் நிறுவனம்.
 
அமெரிக்காவில் பொதுவாக இணையதளத்தில் ஆர்டர் செய்து வரும் பார்சல்களை வீட்டுக்கு வெளியே வைத்துவிட்டு செல்வது வழக்கம். ஆனால் சமீபகாலமாக பார்சல்கள் திருடப்பட்டு வந்தன. 
 
எனவே தொடர் புகார் காரணமாக அமேசான் நிறுவனத்துடன் இணைந்து காவல்துறை சில அதிரடி நடவடிக்கைகள் எடுத்து உள்ளது. அதன்படி, நியூஜெர்சி மாகாணத்தில் அதிகாரிகள் டம்மி பார்சல்களை அதாவது பார்சல்களுக்குள் வெறும் ஜிபிஎஸ் கருவியை வைத்து வீடுகளுக்கு வெளியே வைத்துவிட்டனர். கதவுக்கருகில் ரகசிய கேமராவும் பொருத்தபட்டது. இதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. 
 
கிறிஸ்துமஸ் வரவுள்ளநிலையில் 900 மில்லியன் பேக்கேஜுகளை அமெரிக்க தபால் சேவை நிறுவனம் விநியோகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் அமேசான் நிறுவனம் அமேசான் கீ எனும் சேவையை அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் பார்சல் விநியோகம் செய்பவர்கள் ஒரு செயலியின் உதவியோடு கதவை திறந்து வீட்டுக்குள் பார்சலை வைத்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்புவின் பெரியார் குத்து: பதில் சொல்லாமல் மழுப்பிய எச்.ராஜா