சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்கள் மீது கடந்த மாதம் விலை உயர்வை அமல்படுத்தியது. ரூ.600 முதல் ரூ.1000 வரை விலை உயர்த்தப்பட்டது.
இந்த விலை உயர்வுக்கு இந்திய ரூபாய் மதிப்பின் சரிவே காரணம் என சியோமி நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது சியோமி தனது ஸ்மார்ட்போன் மீது விலை குறைப்பை இன்று முதல் செயல்பாட்டில் கொண்டுவந்துள்ளது.
அதன்படி, ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ராம், 16 ஜிபி மெமரி விலை ரூ.5,999 என்றும் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் ரூ.6,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு முன்னர் சியோமி ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்களின் விலை முறையே ரூ.8,499 மற்றும் ரூ.6,592 விலையில் விற்பனை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்போன்கள் அமேசான் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
சியோமி ரெட்மி 6ஏ சிறப்பம்சங்கள்:
# 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட்
# 2 ஜிபி ராம், 16 ஜிபி / 32 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) மற்றும் MIUI 9
# டூயல் சிம் ஸ்லாட், இன்ஃப்ராரெட் சென்சார்
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
# 5 எம்பி செல்ஃபி கேமரா
# 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி