Publish Date: Wed, 01 Dec 2021 (10:06 IST)
Updated Date: Wed, 01 Dec 2021 (10:32 IST)
டிவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த ஜாக் டோர்சி நேற்று தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து புதிய சி இ ஓ வாக இந்தியா வம்சாவளியை சேர்ந்த பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய சம்பளம் மற்றும் பங்குகள் குறித்த விவரம் இப்போது வெளியாகியுள்ளது.
ஆண்டுக்கு ஒரு மில்லியன் டாலர் சம்பளமாக பெறும் அவர் ஒவ்வொரு ஆண்டும் 150 சதவீதம் போனஸும் பெறுகிறார். அதுமட்டுமில்லாமல் டிவிட்டர் நிறுவனத்தின் 90 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.