Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வலிமை ஓவர்சீஸ் விநியோக உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்!

Advertiesment
வலிமை ஓவர்சீஸ் விநியோக உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்!
, சனி, 27 நவம்பர் 2021 (14:21 IST)
வலிமை படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமை இதுவரை இல்லாத தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  பொங்கல் பண்டிகைக்கு வலிமை படம் வெளியாக உள்ளது.

ஆனால் இன்னமும் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் ஜனவரி 12 ஆம் தேதி புதன் கிழமையில் வெளியாக அதிகவாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆர் ஆர் ஆர் படம் ஜனவரி 7 ஆம் தேதி வெளியாக வலிமை 5 நாட்கள் இடைவெளியில் வெளியாகி 20 ஆம் தேதி வரை உள்ள பொங்கல் பண்டிகை விடுமுறை முழுவதையும் கைப்பற்ற முடிவு செய்துள்ளதாம்.

இதையடுத்து படத்தின் வியாபார விஷயங்களை படக்குழு தொடங்கிவிட்டது. இப்போது வெளிநாடு விநியோக உரிமையை ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் எனும் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுவரை அஜித் படத்துக்கு இல்லாத தொகைக்கு இந்த உரிமை விற்கப்பட்டுள்ளதாம். இதே நிறுவனம்தான் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்பட உரிமையையும் கைப்பற்றியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேட்ட நொடி முதல் கிறங்கிக் கிடக்கிறேன்… இரவின் நிழல் குறித்து பார்த்திபன் உருக்கம்!