கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் நாட்டில் இம்ரான் கான் அரசு கவிழும் என்று எதிர்பார்க்கப் பட்டது என்பதும் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தபோது 174 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்
இதனை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரன்கான் அரசு கவிழ்ந்தது என அறிவிக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து ஆட்சியை இழந்த முதல் பாகிஸ்தான் பிரதமர் என்ற பெயர் இம்ரான்கானுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது