தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை சமீபத்தில் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் அமெரிக்கா சென்று இருப்பதாகவும், எலான் மஸ்க் அவர்களின் டெஸ்லா நிறுவனத்திற்கு விசிட் அடித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், அமெரிக்க சென்ற அண்ணாமலை, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அமெரிக்கா சென்றுள்ள அவர் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள டெஸ்லா நிறுவன தலைமை அலுவலகம் சென்றார். அங்குள்ள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அண்ணாமலை இன்னும் சில நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து, சில முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்துவார் என்று கூறப்படுகிறது.