Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீனாவை தொடர்ந்து பாகிஸ்தானை பதம் பார்த்த பேய் மழை! – வெள்ளக்காடான தலைநகரம்!

Advertiesment
சீனாவை தொடர்ந்து பாகிஸ்தானை பதம் பார்த்த பேய் மழை! – வெள்ளக்காடான தலைநகரம்!
, புதன், 28 ஜூலை 2021 (12:26 IST)
சமீபத்தில் சீனாவில் திடீர் அதிகனமழை பெய்து பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பாகிஸ்தானிலும் அதிகனமழை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றால் உலக நாடுகள் பல்வேறு விதமான பாதிப்புகளை எதிர்கொள்ள தொடங்கியுள்ளன. சமீபத்தில் சீனாவில் ஒரே நாளில் 200 மிமி அளவிற்கு அதிகனமழை பெய்ததன் விளைவாக பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

தற்போது இவ்வாறான மழை பாகிஸ்தானிலும் பெய்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் ஒரே நாளில் பெய்து முடித்த அதிதீவிரகனமழையாக் ஊரே வெள்ளக்காடாகியுள்ளது. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆகஸ்ட் மாதத்தில் அதிக லீவ் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!