ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் – ராணுவம் இடையேயான மோதல் அதிகரித்துள்ள நிலையில் 1,500 தலீபான்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் முழுவதுமாக திரும்ப பெறப்பட்ட நிலையில் தலீபான்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் ஆப்கன் ராணுவத்திற்கும், தலீபான்களுக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் தலீபான்கள் தங்கள் எதிர்ப்பாளர்கள் பலரை சுட்டுக் கொல்லும் வீடியோ வைரலான நிலையில், கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் சுமார் 1,500 தலீபான்களை ராணுவம் கொன்று குவித்துள்ளதாக அரசு செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையை தலீபான் அமைப்பு மறுத்துள்ளதுடன், அரசு அதிகபடுத்தி காட்டுவதாக கூறியுள்ளது.