Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரவாதி மசூத் அசார் குடும்பத்திற்கு ரூ.14 கோடி நிதியுதவி.. பாகிஸ்தான் பிரதமர் ஒப்புதல்?

Siva
புதன், 14 மே 2025 (17:03 IST)
சமீபத்தில், இந்தியாவின் தாக்குதல் காரணமாக தீவிரவாதி மசூத் அசாரின் குடும்பத்தினர் 14 பேர் உயிரிழந்த நிலையில், நிவாரண நிதியாக பாகிஸ்தான் அரசு 14 கோடி ரூபாய் அந்த குடும்பத்திற்கு வழங்க ஒப்புதல் வழங்கி இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியா நடத்திய "ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதலில், தீவிரவாதி மசூத் அசார் தப்பியிருந்தாலும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, அவர்களது உறவினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் வீதம், மொத்தமாக 14 கோடி ரூபாய் வழங்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தீவிரவாதி பட்டியலில் உள்ள மசூத் அசாரின் குடும்பத்திற்கு இவ்வளவு பெரிய தொகை வழங்கப்படுவது, சர்வதேச அளவில் பெரும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
 
தற்போது, மசூத் அசாரின் குடும்பத்தில் அவர் ஒருவர் மட்டுமே உயிரோடிருப்பதால், இந்த 14 கோடி ரூபாயும் அவருக்கே செல்ல வாய்ப்புள்ளதாகவும், இதன் மூலம் தீவிரவாதம் மேலும் வளர வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுவது புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

IRCTC-யின் 'ஸ்ரீ ராமாயண யாத்திரை' டீலக்ஸ் ரயில் பயணம்.. தொடங்குவது எப்போது? கட்டணம் எவ்வளவு?

தேர்தலுக்கு பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன்

டெல்லி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. லிப்டில் சிக்கிய நபர் பரிதாப பலி..!

மகாராஷ்டிர அரசியலில் வரலாறு காணாத திருப்பம்: ராஜ் - உத்தவ் தாக்கரே மீண்டும் கைகோர்க்கிறார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments