எல்லை தாண்டி சென்றதாக பிடிப்பட்ட வீரர்களை இந்தியா - பாகிஸ்தான் பரஸ்பரம் திரும்ப அனுப்பியுள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பரபரப்பு நிலவி வந்த நிலையில் பஞ்சாப் - பாகிஸ்தான் எல்லையில் பணியில் இருந்த BSF வீரர் புர்ணம் சாஹூ எல்லை தாண்டி வந்ததாக பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் விவசாயக் குழு ஒன்றை அழைத்துச் சென்ற போது பூர்ணம் சாஹூ எல்லைக் கடந்து வந்ததாக கூறி அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்துக் கொண்டுச் சென்றனர்.
அவரை மீட்டுத்தரக் கோரி அவரது கர்ப்பிணி மனைவி ரஜனி இந்திய அரசிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்து வந்தார். எனது சிந்தூரை காப்பாற்றிக் கொடுங்கள் என அவர் கேட்ட நிலையில் அதுகுறித்த நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது.
அதன்படி பாகிஸ்தான் ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட பூர்ணம் சாஹூ இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இன்று காலை அட்டாரி எல்லையில் அவர் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கபட்ட நிலையில், இந்திய ராணுவமும் தாங்கள் பிடித்து வைத்திருந்த பாகிஸ்தான் ராணுவ வீரரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்துள்ளது.
Edit by Prasanth.K