புத்த மதத்துறவி தலாய்லாமா இலங்கை நாட்டிற்குச் செல்ல எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கடந்த வாரம் இந்தியாவில் திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய் லமாவை இலங்கை புத்தமதத் துறவிகள் சிலர் சந்தித்தனர்.
அப்போது, தலாய் லாமாவை இலங்கை நாட்டிற்கு வரும்படி அவருக்கு நேரில் அழைப்பு விடுத்தனர்.
இந்த நிலையில், அவர் எப்போது, அங்கு செல்லுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சீனாவில், தலாய் லாமா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இன்று இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் அதிகாரி நேற்று புத்தக மத குருமார்களை சந்தித்த பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''தலாய்லாமாவை வரவேற்பதை எந்த நாடும் தயாராகவில்லை., சீன- திபெத் மக்களும்கூட அவர் எதிர்க்கின்றனர்.அவர் திபெத்தை சீனாவில் இருந்து பிரிக்க முயல்கிறார் ''என்று குற்றம்சாட்டியுள்ளார்.