Publish Date: Wed, 18 Jan 2023 (15:16 IST)
Updated Date: Wed, 18 Jan 2023 (15:18 IST)
உலக மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருந்த சீனாவை இந்தியாவின் மக்கள் தொகை தாண்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலக நாடுகள் முழுவதும் மக்கள் தொகை பெருக்கம் என்பது பெரும் கட்டுப்படுத்த வேண்டிய காரணியாக இருந்து வருகிறது. உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதல் இடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சீனா மக்கள் தொகையை குறைக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதனால் 2022 இறுதியில் சீனாவை விட இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்துவிட்டதாக உலக மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, இந்திய மக்கள் தொகை 142.8 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவை விட 50 லட்சம் மக்கள் இந்தியாவில் உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் சீனாவின் மக்கள்தொகையில் 8.50 லட்சம் குறைந்துள்ளது.
2022 முதல் 2050க்குள் மக்கள் தொகை அதிகரிக்க உள்ள நாடுகளில் காங்கோ, எகிப்து, தான்சானியா, பிலிப்பைன்ஸ், எத்தியோப்பியா வரிசையில் இந்தியாவும் உள்ளது.