Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விவசாயி மாணவிக்கு ஒரு கோடி சம்பளத்தில் வேலை: ஒரு ஆச்சரியமான தகவல்

Advertiesment
கனடா
, வியாழன், 4 ஏப்ரல் 2019 (21:19 IST)
விவசாயிகளின் வாரிசுகளே தற்போது விவசாயம் சம்பந்தப்பட்ட படிப்பை படிக்க தயங்கி வரும் நிலையில் இந்த துறையை தேர்வு செய்து படித்தால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கையுடன் விவசாயத்துறையில் முதுநிலை படிப்பு படித்தார் பஞ்சாபை சேர்ந்த கவிதா என்ற மாணவி
 
அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. படித்து முடித்தவுடனே கேம்பஸ் இண்டர்வியூவில் கனடாவை சேர்ந்த மாண்சாடோ என்ற விவசாயி நிறுவனம் ஒன்றில் அவர் தேர்வு செய்யப்படார். சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆண்டுக்கு ரூ.1 கோடி. 
 
விவசாய படிப்பு படித்தால் வேலை கிடைக்காது என்று கூறப்படும் நிலையில் ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் கவிதா வேலையில் சேரவிருப்பது சக மாணவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. கனடா உள்பட பல நாடுகள் விவசாயம் சம்பந்தப்பட்ட படிப்புகளை படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளை வழங்கி வருவதால் இனிவரும் தலைமுறையினர்கள் இந்த படிப்பை அதிகம் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கபடுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளத்தில் சிக்கியபின் மாமரத்தில் குழந்தையை ஈன்றெடுத்த தாய்