Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முகத்தை கவ்விய ஆக்டோபஸ்; கதறிய சீன பெண்: வைரல் வீடியோ!

Advertiesment
சீன பெண்
, வெள்ளி, 10 மே 2019 (10:36 IST)
சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் விளையாட்டான செயல் விபரீதத்தில் முடிந்துள்ளது. 
 
சீ சைடு கேர்ள் லிட்டில் செவன் என்கிற இணையத்தில் சீன இளம் பெண் ஒருவர் கடல்வாழ் உயிரினங்களுடன் பழகுவதையும், விளையாடுவதையும் அவற்றை சாப்பிடுவதையும் வீடியோவாக பதிவிட்டு வந்துள்ளார். 
 
ஏற்கனவே இந்த பெண்ணுக்கு ரசிகர்கள் இருந்தாலும், மேலும் ரசிகர்களை கவர் விநோதமான காரியம் ஒன்ரை செய்ய முயற்சித்துள்ளார். ஆம் உயிரோடு இருக்கும் ஆக்டோபஸ் ஒன்றை சாப்பிட்டு அதை லைவ்வாக ஒளிபரப்ப நினைத்துள்ளார். 
 
அதன்படி அக்டோபஸை அவர் உண்ண முயற்சித்த போது, அந்த அக்டோபஸ் சற்றும் எதிராபாராத வகையில், அந்த பெண்ணின் கன்னத்தையும் சதையையும் சேர்த்து கவ்வியது. இதனால் வலி தாங்காமல் அந்த பெண் லைவ் வீடியோவில் கதறியுள்ளார்.
 
பின்னர் ஒரு வழியாக அழுதுக்கொண்டே அக்டோபஸை பிடித்து இழுக்க, அவரது முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது. அந்த பெண்ணும் வைரலாகிவிட்டார். இதோ அந்த வீடியோ... 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்டிய புருஷனை விட்டுவிட்டு… கள்ளப்புருஷனோடு – பழ கருப்பையா சர்ச்சை பதில் !