Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முரளி விஜயால் செம கடுப்பான ’ தோனி ’ - வைரலாகும் வீடியோ

Advertiesment
முரளி விஜயால் செம கடுப்பான ’ தோனி ’ - வைரலாகும் வீடியோ
, புதன், 8 மே 2019 (12:48 IST)
ஐபிஎல் போட்டி தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மும்பை அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் வீரர் முரளி விஜய் ஒரு கேட்சை தவறவிட்டதால் கேப்டன் தல தோனி கடுப்பானார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் டி 20 தொடரின் லீக் சுற்றுகள் முடிந்து தகுதி சுற்று போட்டி நடைபெற்றது.
 
இதில் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.மொத்தமுள்ள 20ம் ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது.

சென்னை அணியில் தோனி ( 37) ரன்களும் அம்பட்டி ராயுடு  (42) கூட்டணி  அணியை சரிவிலிருந்து மீட்டது.
 
பின்னர் ஆடிய மும்பை அணி 18.3 ஓவர்களில் முடிவில் 132  ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மும்பை அணிவீரர் சூர்யக்குமார் யாதவ் 71 ரனகள் எடுத்து அணியின் வெற்றிக்கு அதிரடியாக விளையாடினார்.
 
மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தொடங்கிய 5 வது ஓவரில் சூர்யகுமார் யாதவின் கேட்ச் ஒன்றை முரளி விஜய் தவறவிட்டார். அதவாது சூர்யக்குமார் அடித்த பந்து முரளி விஜயின் கைகளில் பட்டுச் சென்றது. இதனால் தல தோனி முரளி விஜயை முறைத்துப் பார்த்தார்.மேலும் வாட்சனும் ஒரு கேட்சை தவறவிட்டார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வுட்டன் ஸ்பூன் - கோஹ்லியைக் கலாய்த்த விஜய் மல்லையா !