வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தங்களுக்கு அதற்கு உரிமை உள்ளதாக வாதிட்டுள்ளது.
வடகொரியா கடந்த பல ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தும் விதமாக தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் பல எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடந்து வரும் ஐ.நா சபை 76வது பொதுக்கூட்டத்தில் பல நாடுகளும் உரையாற்றி வருகின்றன. இந்த கூட்டத்தில் வடகொரியாவின் அணு ஆயுத சோதனை குறித்து பேசிய அந்நாட்டின் தூதர் கிம் சாங் “அணு ஆயுதம் கொண்ட ஒரு நாடு தனது ஆயுதத்தை சோதித்து பார்க்க உரிமை உள்ளது. நாட்டில் அமைதி மற்றூம் பாதுகாப்பு நிலவவும் எங்கள் தேசிய பாதுகாப்பு நலனுக்காக இந்த நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துவருகிறோம்” என்று கூறியுள்ளார்.