இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில் இந்த போரில் காசா மீது சரமாரியாக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் அப்பாவி பொதுமக்கள் உள்பட சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் காசா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று பாலஸ்தீனம் உள்பட உலக நாடுகள் கேட்டுக்கொண்ட போதிலும் காசாவின் மீதான போர் நிறுத்தம் செய்ய முடியாது என்றும் ஆனால் அதே நேரத்தில் மனிதநேய உதவிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காசா நகரில் வசிக்கும் பொதுமக்கள் உதவிக்காக காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 4 மணி நேரத்திற்கு மட்டும் தாக்குதல் நிறுத்திக் கொள்வதாகவும் அந்த நேரத்தில் மனிதநேய உதவிகள் செய்து கொள்ளலாம் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது
காசா மீதான தாக்குதலை நிறுத்தம் செய்ய முடியாது என இஸ்ரேல் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.