Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எல்லாரும் இந்தியாவுக்கே சப்போர்ட் பண்றாங்க! – மனம் குமுறும் பாகிஸ்தான் அமைச்சர்

எல்லாரும் இந்தியாவுக்கே சப்போர்ட் பண்றாங்க! – மனம் குமுறும் பாகிஸ்தான் அமைச்சர்
, செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (12:38 IST)
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக யாரும் வர விரும்பவில்லை என வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.குரேஷி.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துகள் ரத்து செய்யப்பட்டு, இந்தியாவின் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதற்கு பாகிஸ்தான் தனது எதிர்ப்பை தெரிவித்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்சினை பூதாகரமானது. இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளின் உதவியை கோரியது பாகிஸ்தான்.

ஆனால் பல நாடுகள் “இது இந்தியாவின் உள் விவகாரம். இதில் நாங்கள் தலையிட மாட்டோம்” என கைவிரித்து விட்டன. பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்புகள் கூட இந்த விஷயத்தில் தலையிட முடியாது என கூறிவிட்டன.

இதுகுறித்து தனது மனக்குமுறலை வெளிப்படுத்திய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.குரேஷி “காஷ்மீர் விவகாரத்தில் நீதி கேட்டு இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் மற்றும் பி5 கூட்டமைப்பு நாடுகளிடம் ஆதரவு கேட்டோம்.

ஆனால் யாரும் இந்தியாவுக்கு எதிராக நிற்க விரும்பவில்லை. பல நாடுகள் இந்தியாவுடன் வணிகரீதியான உறவை கொண்டிருக்கின்றன” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ப.சிதம்பரம் இந்த பூமிக்கு பாரம் – விளாசிய எடப்பாடி பழனிச்சாமி