Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா நோயாளியே இல்லாமல் 100 நாட்கள்: உலகின் ஒரே நாடு இதுதான்!

கொரோனா நோயாளியே இல்லாமல் 100 நாட்கள்: உலகின் ஒரே நாடு இதுதான்!
, திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (08:08 IST)
கொரோனா நோயாளியே இல்லாமல் 100 நாட்கள்
சீனாவின் வூகான் என்ற மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன் பின் இந்தியா உள்பட உலகின் 200 நாடுகளில் பரவி மனித இனத்திற்கே சவாலாக இருந்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கிவிட்டது என்பதும், லட்சக்கணக்கான பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மீண்ட ஒரே நாடாக நியூசிலாந்து நாடு கருதப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே கொரோனா வைரஸ் நோயாளி ஒருவர் கூட இல்லை என்ற நிலை தங்கள் நாட்டில் இருப்பதாக நியூசிலாந்து அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது தங்கள் நாட்டில் மூன்று நாட்களாக ஒரு கொரோனா நோயாளி கூட கண்டறியப்படவில்லை என்று நியூசிலாந்து அறிவித்துள்ளது. இதற்கு அந்த நாடு எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளும் ஒரு முக்கிய காரணம் 
 
வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி லேசாக இருந்தாலும் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுவதால் இதுவரை ஒரு கொரோனா நோயாளி கூட கடந்த 100 நாட்களில் நியூசிலாந்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
நியூசிலாந்து நாட்டை பின்பற்றி அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுத்தால் நிச்சயம் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கொரோனாவில் இருந்து மீண்டு விடும் என்றே கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் கொரோனாவால் மரணம்