இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. கடந்த ஐந்தாம் தேதி தொடங்கிய முதலாவது கிரிக்கெட் டெஸ்ட்
போட்டியில் இங்கிலாந்து அணி மிக அபாரமாக விளையாடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது இதனையடுத்து இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விரைவில் தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது திடீரென இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான பென்
ஸ்டோக்ச் அணியில் இருந்து தற்காலிகமாக விலகி உள்ளார். குடும்ப காரணங்களுக்காக அவர் அணியிலிருந்து விலகி உள்ளதாகவும் கூறப்படுகிறது
மேலும் அவர் இங்கிலாந்தில் இருந்து தனது குடும்பத்துடன் நியூசிலாந்து நாட்டிற்கு செல்ல உள்ளதாகவும் அவர் திரும்ப ஓரிரு மாதங்கள் ஆகும் என்பதால் மீதமுள்ள இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் போட்டிகளில்
அவர் கலந்து கொள்ள மாட்டார் என்றும் கூறப்படுகிறது