Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீனாவில் வௌவாலில் இருந்து புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!

சீனாவில் வௌவாலில் இருந்து  புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!
, ஞாயிறு, 13 ஜூன் 2021 (07:52 IST)
சீனாவில் வௌவாலில் இருந்து புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தான் இன்று உலகம் முழுவதும் மனித இனத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சீனாவில் இருந்து தற்போது புதிய வகை வைரஸ் வாயிலிருந்து பரவி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் போன்ற சீனாவில் சிலவகை வெளவால் இனத்தில் புது வகையான வைரஸ்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதில் ரினோலோபஸ் பசில்லஸ் எனப்படும் வைரஸ் மரபணு இருப்பதாகவும், இந்த வைரஸ் தற்போது பரவி வருவதாகவும் கூறப்படுகிறது 
 
தற்போது மனிதர்களுக்கு பரவி வரும் கொரோனா வைரஸ்க்கு இணையாக இந்த வைரஸ் இருப்பதால் இந்த வைரஸ் மனிதர்களுக்கும் பரவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவாமல் இருக்க சீன அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளிகளில் சிசிடிவி கேமரா: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!