தொடர்ந்து அண்டை நாடுகளின் வான்வெளி, நீர்வழி பகுதிகளில் சீனா அத்துமீறி வரும் நிலையில் தற்போது மலேசியாவிடமும் உரசிக் கொண்டுள்ளது சீனா.
கடந்த சில மாதங்களாகவே சீனா தனது அண்டை நாடுகளில் எல்லைகளில் அத்துமீறி வருவது அண்டை நாடுகளுக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது. முக்கியமாக தென் சீன கடல் பகுதியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர சீனா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சிறிய நாடுகளின் எல்லைக்குள் சீனாவின் அத்துமீறல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மலேசிய எல்லைக்குட்பட்ட வான்வெளி பகுதியில் 16 சீன விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளது. உடனடியாக அவற்றை கையாள மலேசிய விமானங்கள் அனுப்பப்பட்ட நிலையில் அவை வருவதற்கு சீன விமானங்கள் எல்லையை விட்டு சென்றன.
தங்கள் நாட்டிற்கு சீனா அத்துமீறியுள்ளதாக மலேசியா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அதை மறுத்துள்ள சீனா தாங்கள் சர்வதேச வான் எல்லையிலேயே பறந்ததாக கூறி வருகிறது.