விண்வெளியில் நம் கண்ணுக்கு எட்டிய வரையிலுமே அதிசயக்கத்தக்க ஏராளமான நட்சத்திரங்கள் கோள்கள் காணப்படுகின்றன. ஆனால் தொலைநோக்கியாலும், செயற்கை கோள் எடுத்து அனுப்பி புகைப்படங்களில் இருந்து பார்த்தால் ஏராளமான விசயங்கள் கிடைக்கும்.
அதைத்தான் நம் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியாளர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில்,விண்வெளியில் புவி ஈர்ப்பு நுண்ணலையில் சிக்கிய பொருள் சிறிய அளவிலான கருந்துளையாக இருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இத்தாலி நாட்டில் உள்ள பீசா நகரில் உள்ள ஐரீப்பிய புவி ஈர்ப்பு மையத்தில் வானியல் ஆய்வில் விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டபோது, 800 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பொருள் கருந்துளையாகவோ நட்சத்திரமாகவோ இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.