நியுசிலாந்து நாட்டில் ஆன்லைனில் அதிகமாக போர்னோகிராபி படங்களைப் பார்க்கும் சிறுவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக ஒரு குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
நியுசிலாந்து நாட்டில் ஆன்லைனில் போர்னோ கிராபி படம் பார்க்கும் சிறுவர்களுக்கும் அந்த படங்களில் இருக்கும் உறவுமுறைக்கும் எதார்த்த வாழ்க்கையின் உறவுமுறைக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்த்தும் விதமாக ஒரு குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி போர்னோ நடிகர்கள் இருவர் ஒரு வீட்டுக்கு நிர்வாணமாக சென்று கதவை தட்ட வீட்டின் உரிமையாளர் பெண் வந்து அதிர்ச்சியடைகிறார்.
அவர்கள் அந்த பெண்ணிடம் ‘உங்கள் மகன் அதிகமாக ஆன்லைனில் பார்ன் படங்களைப் பார்க்கிறான். அவனிடம் பார்ன் படங்களின் காட்சிக்கும், நிஜ வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது என சொல்லவே நாங்கள் வந்துள்ளோம்’ என சொல்ல சிறுவன் அங்கு வர அவர்களை அப்படிப் பார்த்து அதிர்ச்சியடைகிறான். அதன் பின்னர் அவனது அம்மா, அவனிடம் இதுகுறித்து பேசுவதாக அந்த குறும்படம் முடிகிறது.
இந்த குறும்படத்துக்கு நியூசிலாந்து நாட்டின் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இணையத்தில் இதுவரை 6 மில்லியன் பேர் இந்த குறும்படத்தைப் பார்த்துள்ளனர். இந்த குறும்படத்தை அந்த நாட்டின் அரசே தயாரித்துள்ளது.