Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூரியனை சுற்றி வரும் கோளை துரத்தி சென்ற விண்கலம்! – நாசா சாதனை!

Advertiesment
சூரியனை சுற்றி வரும் கோளை துரத்தி சென்ற விண்கலம்! – நாசா சாதனை!
, வியாழன், 22 அக்டோபர் 2020 (15:45 IST)
சூரியனை சுற்றி வரும் பென்னு என்னும் கோளை நாசாவின் விண்கலம் பிந்தொடர்ந்து சென்று அதில் உள்ள கற்களை சேகரித்து புதிய சாதனை படைத்துள்ளது.

சூரியனை பூமியும், பிற கோள்களும் சுற்றி வருவது போல எரிநட்சத்திரங்களும், விண்கற்களும் கூட சுற்றி வருகின்றன. அவற்றை ஆய்வு செய்ய அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் விஞ்ஞான ஆராய்ச்சியை விரிவுப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் சூரியனை சுற்றி வரும் பென்னு எனும் சிறிய கோள் ஒன்றை 1999ம் ஆண்டு நாசா கண்டறிந்தது. சூரியனை சுற்றி வரும் அந்த கோள் பூமியை நெருங்கி வரும் என்றாலும் அதன் சுழற்சி வேகம் பூமிக்கு நிகராக இருப்பதால் அப்போது விண்கலத்தை அனுப்பி ஆய்வு மாதிரிகளை சேர்ப்பது இயலாத காரியம் என்பதால் அதை பின் தொடர்ந்து சென்று ஆய்வு மாதிரிகளை சேகரிக்க திட்டமிட்ட நாசா 2016ம் ஆண்டு இதற்கான விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.

4 ஆண்டு காலமாக 100 மில்லியன் மைல்கள் தூரம் பயணித்த அந்த விண்கலம் பென்னு கோளிலிருந்து பாறைகள், மண் உள்ளிட்டவற்றை வெற்றிகரமாக சேகரித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2023ம் ஆண்டில் பென்னு மாதிரிகளுடன் விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் தேர்வில் வென்ற ஜீவித்குமாருக்கு லேப்டாப் கொடுத்த குஷ்பு!