செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு வரும் நாசாவின் பெர்சவரன்ஸ் விண்கலம் எடுத்த சமீப புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
	
	
	சமீப ஆண்டுகளில் உலக நாடுகள் பல செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொள்வதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய பெர்சவரன்ஸ் என்ற அதிநவீன விண்கலம் மற்றும் ரோவரை செவ்வாய்க்கு அனுப்பினர்.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	பெர்சவரன்ஸ் அங்கு எடுத்த பல புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது பாறை பகுதியை குடைந்து அதில் சில மாதிரிகளை பெர்சவரன்ஸ் சேமித்துள்ளது. இந்த புகைப்படங்களை நாசா தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளது.