Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: இந்தியாவில் பார்க்க முடியுமா?

இன்று இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: இந்தியாவில் பார்க்க முடியுமா?
, வியாழன், 10 ஜூன் 2021 (07:35 IST)
இன்று இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழ இருப்பதை அடுத்து இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது என்று தகவல் வெளிவந்துள்ளது. 
 
வானில் நிகழும் அற்புத நிகழ்வுகளில் ஒன்றான சூரிய கிரகணம் இன்று நிகழ உள்ளது என நாசா தெரிவித்துள்ளது. ஆனால் இந்த சூரிய கிரகணத்தை கனடா, வடக்கு ரஷ்யா மற்றும் கிரீன்லாந்து நாடுகளில் உள்ளவர்கள் மட்டுமே முழுமையாக பார்க்க முடியும் என்றும் இந்த சூரிய கிரகணம் மூன்று நிமிடங்கள் 51 வினாடிகள் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு வரும் போது நிகழும் சூரிய கிரகணம், சூரியன் நிலவை மறைக்கும்போது நெருப்பு வளையம் போன்று காட்சி அளிக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. சூரியனை முழுவதுமாக நிலவு மூடப்பட்டதால் மறைக்கப்பட்ட பகுதிக்கு வெளியே உள்ள பகுதி ஒளிரும் என்பதால் நெருப்பு வளையம் தோன்றும் என்பது குறிப்பிடதக்கது. 
 
இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு தொடங்கி மாலை 6.41 வரை இந்த சூரிய கிரகணம் நிகழும் என்றும் இந்த சூரிய கிரகணத்தை கனடா, ரஷ்யா மற்றும் கிரீன்லாந்து ஆகிய பகுதிகளில் இருப்பவர்கள் முழுமையாக பார்க்க முடியும் என்றும் கிழக்கு அமெரிக்கா, வடக்கு அலாஸ்கா, கனடா, கரீபியனின் சில பகுதிகள், ஐரோப்பா, ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சில பகுதிகளில் பகுதியாக பார்க்க முடியும் என்றும் நாசா தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா 3வது அலை குழந்தைகளை, சிறுவர் - சிறுமிகளை குறி வைக்குமா?