சூரியனை சுற்றி நிறைய துகள்களும், அணுக்களும் இருக்கிறது. இவை அனைத்தும் வெவ்வேறு அலைநீளத்தில் கூரியனை சுற்றி வந்து கொண்டு இருக்கிறது. இந்த அலைகள் சூரியனில் ஒரு வித ஒலியை உருவாக்கும்.
இந்த ஒலி எவ்வாறு இருக்கும் என நாசா பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பின் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளது. சூரியனின் சத்தத்தை நாசா தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. இதனை டவுன் லோட் செய்து கொள்ள முடியும்.
இந்த ஆராய்ச்சிக்காக நாசாவும், ஐரோப்பாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமும் சேர்ந்து செயல்பட்டு இருக்கிறது. சோகோ என்று அழைக்கப்படும் சோலார் மற்றும் ஹீலியோஸ்பெரிக் அப்சர்வேட்டரி என்ற கருவி மூலம் இந்த சத்தத்தை மட்டும் தனியாக பிரித்து எடுத்துள்ளனர்.