Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னை போலீஸ் புடிச்சிட்டாங்க ; நீங்களும் செய்யாதீங்க : நடிகர் ஜெய் அறிவுரை (வீடியோ)

Advertiesment
என்னை போலீஸ் புடிச்சிட்டாங்க ; நீங்களும் செய்யாதீங்க : நடிகர் ஜெய் அறிவுரை (வீடியோ)
, புதன், 27 ஜூன் 2018 (13:50 IST)
அதிக இரைச்சலுடன் காரை ஓட்டிய நடிகர் ஜெய்க்கு, சென்னை போலீசார் வித்தியாசமான தண்டனையை வழங்கியுள்ளனர்.

 
மது அருந்திவிட்டு காரை செலுத்தி போலீசாரிடம் பலமுறை சிக்கியவர் நடிகர் ஜெய். சமீபத்தில் மிதமிஞ்சிய மது போதையில் அடையாற்றில் தனது காரை ஓரிடத்தில் மோதி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் நீதிமன்றம் வரை அவர் செல்ல நேரிட்டது.
 
இந்நிலையில், நேற்று இரவு பெரிய மேட்டில் தனது காரை அதிக இரைச்சலுடன் அவர் ஓட்டி சென்றார். அவரை தடுத்தி நிறுத்திய போலீசார், அருகில் மருத்துவமனை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்கள் இருக்கிறது. எனவே அவர்கள் பாதிப்படைவார்கள். பிரபலமான நடிகராக இருந்து கொண்டு நீங்களே இப்படி செய்யலாமா என அவருக்கு அறிவுரை கூறினர்.
 
இதையடுத்து போலீசாரின் அறிவுரையை ஏற்றுக்கொண்ட ஜெய், அதற்காக வருத்தம் தெரிவித்தார். மேலும், அவரை வைத்து ஒரு விழிப்புணர்வு வீடியோவையும் போலீசார் எடுத்தனர்.  அதில் ‘இது என்னுடைய கார்தான். இதுபோல் அதிக இரைச்சலுடன் காரை ஓட்டினால் உங்கள் காரை போலீசார் சீஸ் செய்வார்கள். எனவே, அதிக சப்தத்தை உருவாக்கும் கருவியை காரிலிருந்து எடுத்து விடுங்கள். இது பொதுமக்களுக்கு தொல்லையை கொடுக்கும். இதுபோல் செய்ய வேண்டாம். இது எனது தாழ்மையான் கருத்து” என ஜெய்யை போலீசார் பேச வைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வர்த்தக போர்: வரியை ரத்து செய்தது சீனா!