Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உச்சத்தை தொட்டும் ஓயாத கொரோனா: அமெரிக்காவில் தொடரும் மரண ஓலங்கள்

Advertiesment
அமெரிக்கா
, வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (07:51 IST)
அமெரிக்காவில் தொடரும் மரண ஓலங்கள்
கொரோனா வைரசால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது வல்லரசு நாடான அமெரிக்கா தான். அந்நாட்டில் கொரோனா வைரசுக்கு தினந்தோறும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 2137 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
மிகப்பெரிய பேரழிவை அமெரிக்கா சந்தித்து கொண்டிருப்பதாகவும் அமெரிக்காவில் மட்டும் இதுவரை 6 லட்சத்து 77 ஆயிரம் பேருக்கு மேல் குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த சில நாட்களாகவே அமெரிக்காவில் தினமும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து வருவதால் பிணங்களை புதைக்க கூட இடமில்லை என்றும் மின்மயானத்தில் எரியூட்டவும் போதுமான ஆளில்லாத அவல நிலை இருந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.
 
அமெரிக்காவில் குறிப்பாக நியூயார்க் நகரம் தான் கொரோனாவால் மிக மோசமாக தாக்கப்பட்டு வருகிறது. இந்நகரில் மட்டும் மொத்தம் 16 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர் என்பது இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
கொரோனா நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் கொரோனா உச்சத்தை அடைந்து விட்டதாகவும் இனிமேல் படிப்படியாக குறையும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால் உச்சத்தை அடைந்த பின்னரும் மீண்டும் மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டிருப்பதால் அமெரிக்க மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விலைப்பட்டியலை வைத்த விக்கிரமராஜா: சிறிது நேரத்தில் தூக்கி எறிந்த கடைக்காரர்கள்