Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா பணிகளுக்கு இடையே அவ்வப்போது ரொமான்ஸ்: நர்ஸ் தம்பதிகளுக்கு குவியும் பாராட்டுக்கள்

கொரோனா பணிகளுக்கு இடையே அவ்வப்போது ரொமான்ஸ்: நர்ஸ் தம்பதிகளுக்கு குவியும் பாராட்டுக்கள்
, வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (07:18 IST)
கொரோனா பணிகளுக்கு இடையே அவ்வப்போது ரொமான்ஸ்
கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று அமெரிக்கா. சீனாவை விட மிக அதிகமான பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் நிலையில் அந்நாட்டில் உள்ள மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், நர்சுகள் ஆகியோர் இரவு பகல் பாராமல் பணிபுரிந்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை சேர்ந்த மைன்டி பிராக்  மற்றும் பென் கேயர் ஆகிய இருவரும் நர்சிங் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து அதன்பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகள் தற்போது ஒரே மருத்துவமனையில் சுகாதாரத் துறையை பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர் 
 
கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் இரவு பகல் பாராது இவர்கள் மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர் என்பதும் எப்போதாவதுதான் வீட்டுக்கு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரே மருத்துவமனையில் பணி புரிவதால் அவ்வப்போது ஒரு சில நிமிடங்கள் ஓய்வு கிடைக்கும்போது இருவரும் தங்கள் ரொமான்ஸை பகிர்ந்து கொள்கின்றனர்
 
கொரோனா வைரஸ் பாதுகாப்புக்கு உரிய பாதுகாப்பு உடை அணிந்து இருந்த போதும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து தங்களது அன்பை பரிமாறிக் கொள்ளும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. இடைவிடாத மக்கள் பணியின் இடையே தங்கள் ரொமான்ஸ்ஸையும் அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டிருக்கும் இந்த நர்சிங் தம்பதிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது 
 
இது குறித்து இந்த தம்பதிகள் கூறும்போது ’நாங்கள் பெரிதாக எதையும் செய்யவில்லை. நாட்டு மக்களுக்காக நாங்கள் படித்த படிப்பை பயன்படுத்துகிறோம். இடையிடையே எங்கள் காதலையும் புதுப்பித்துக் கொள்கிறோம் என்றும் காதல் என்பது நம்பிக்கையின் சின்னம்தானே என்றும் அவர் அவர்கள் கூறியது அனைவரையும் அசத்தியது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

65 வயது தந்தையை மகன் தூக்கிச் சென்ற விவகாரம்: களமிறங்கியது மனித உரிமை கமிஷன்