இங்கிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை அடையாளம் காண நாய்களுக்கு பயிற்சியளிக்க முடிவு செய்துள்ளனர்.
கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கான பரிசோதனைகள் தற்போது உலகம் எங்கிலும் இல்லை. அது விலை உயர்ந்ததாகவும் உள்ளது.ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவரை கண்டறியும் முன்னமே பலருக்கு பரவி விடுகிற அபாயம் உண்டு.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் நபர்களை அடையாளம் காண மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளனர். அதனால் சமூதாயத்தில் பெருமளவு நோய்த்தொற்று அபாயம் குறையும் என மருத்துவ மோப்ப நாய்கள் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான டாக்டர் கிளாரி கெஸ்ட் தெரிவித்துள்ளார்.