Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த நேரத்தில் பரிட்சை தேவையா? பிரபல நடிகர் டுவீட்

இந்த நேரத்தில் பரிட்சை தேவையா? பிரபல நடிகர் டுவீட்
, திங்கள், 18 மே 2020 (08:37 IST)
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது 
 
இந்த நிலையில் சமீபத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்றும் அதற்காக மாணவர்கள் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்றும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த தேர்வின்போது செய்து தரப்படும் என்றும் தனிமனித இடைவெளியுடன் இந்த தேர்வு நடக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்
 
இந்த நிலையில் சமீபத்தில் இந்த தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதால் ஜூன் 1-ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தப்படுவது குறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ரீட்சை என்பதே மன உளைச்சல் தான். அதுவும் இந்த நேரத்தில் அது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் பெற்றோருக்கும் பெரும் மனஇறுக்கம். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப் பட்ட பின் தேர்வை வைத்துக்கொள்ளலாமே! பள்ளிக் கல்வித்துறை தயை செய்து பரிசீலிக்கவும்.
 
நடிகர் விவேக்கின் இந்த டுவிட்டுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு தடவை ஜெயிச்சா பத்தாது: சிவகார்த்திகேயனுக்கு டுவீட் போட்ட கலெக்டர்