Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா, ரஷ்யா இருதரப்பு பேச்சுவார்த்தை.. ஒரே காரில் சென்ற மோடி - புதின்..!

Mahendran
திங்கள், 1 செப்டம்பர் 2025 (12:06 IST)
சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின், மாநாட்டுக்கு பின் இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக ஒரே காரில் ஒன்றாக பயணம் செய்தனர்.
 
தியான்ஜின் நகரில் நடந்த இந்த உச்சி மாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து பேசிய நிலையில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த சிறப்பான பயணம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
 
பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில், புதின் உடன் மேற்கொண்ட இந்த பயணம் குறித்துப் பகிர்ந்து, 'இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்திற்கு ஒரே காரில் செல்வதாகவும், புதின் உடனான உரையாடல் ஆழமானது' என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 
இதற்கு முன்னதாக, பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்கையும் சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாயின் வீரம் நிறைந்த மகன்.. பூலித்தேவர் குறித்து ஆளுனர் ரவி பெருமிதம்..!

இந்தியா, ரஷ்யா இருதரப்பு பேச்சுவார்த்தை.. ஒரே காரில் சென்ர மோடி - புதின்..!

பாகிஸ்தான் பிரதமர் பகல்காம் தீவிரவாத தாக்குதலை பிரதமர் மோடி.. சீனாவில் பரபரப்பு..!

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 622 பேர் உயிரிழப்பு; 1,500 பேர் படுகாயம்

வெறிநாய் கடித்து 4 வயதுச் சிறுவன் உயிரிழப்பு: ரேபிஸ் தடுப்பூசி போடாததால் சோகம்

அடுத்த கட்டுரையில்
Show comments