Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதிய வகை கொரோனாவுக்கும் தடுப்பூசி: அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!

Advertiesment
புதிய வகை கொரோனாவுக்கும் தடுப்பூசி: அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!
, வியாழன், 24 டிசம்பர் 2020 (07:38 IST)
moderana vaccine
உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 கோடியை நெருங்கிவிட்டது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் கொரோனாவில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தற்போதுதான் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தடுப்பூசி இன்னும் அனைத்து நாட்டு மக்களுக்கும் கிடைக்க வில்லை என்பதும் ஒவ்வொரு நாடாக இந்த தடுப்பூசியை பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திடீரென புதிய வகை கொரோனா வைரஸ் தோன்றி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது இந்த புதிய வகை கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவும் என்பதால் மனித இனமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 

இந்த நிலையில் ஏற்கனவே கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடித்த மாடர்னா என்ற நிறுவனம் புதிய வகை கொரோனாவையும் எங்கள் தடுப்பூசி கட்டுப்படுத்தும் என அறிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னாநிறுவனம் இது குறித்து கூறிய போது ’புதிய வகை கொரோனாவையும் எங்கள் தடுப்பூசி கட்டுப்படுத்தும் என்றும், எங்கள் தடுப்பூசிகளின் நோய் எதிர்ப்பு சக்தி பிரிட்டனில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள கொரோனாவையும் எதிர்க்கும் என்று குறிப்பிட்டுள்ளது


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவசாயிகளின் ரூ.2000 கோடி கடன் தள்ளுபடி! முதல்வர் அதிரடி அறிவிப்பு!