விவசாயிகளின் ரூ.2000 கோடி கடன் தள்ளுபடி!
மத்திய அரசு சமீபத்தில் அமல் செய்த 3 வேளாண் மசோதாக்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் செய்து வருகின்றனர்
கடந்த 25 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் இந்தியா மட்டுமின்றி உலகின் கவனத்தைத் திருப்பி உள்ளது என்பதும் இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இருப்பினும் விவசாயிகள் வேளாண் சட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று தீவிரமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விவசாயிகளை மகிழ்விப்பதற்காக மத்திய அரசும் பாஜக ஆளும் மாநில அரசுகளும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
அந்தவகையில் ஜார்கண்ட் மாநில முதல்வர் இன்று அதிரடியாக ரூபாய் 2000 கோடி விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து உள்ளதாக அறிவித்துள்ளார். விவசாயிகள் 2000 கோடி கடன் தள்ளுபடி என அம்மாநில அமைச்சர் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அம்மாநிலத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. ஜார்கண்ட் மாநில முதல்வரின் இந்த அறிவிப்பு விவசாயிகளை மகிழ்விக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்