Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாயமான நேபாள விமானம் கண்டுபிடிப்பு: 22 பேர்களின் நிலை என்ன?

Advertiesment
Flight
இன்று காலை நேபாள விமான நிலையத்திலிருந்து கிளம்பிய விமானம் திடீரென மாயமானதை அடுத்து அந்த விமானம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இன்று காலை 9 மணிக்கு நேபாளத்தில் இருந்து கிளம்பிய விமானத்தில் 19 பயணிகள் மற்றும் மூன்று ஊழியர்கள் இருந்தனர். இந்த விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் தொடர்பு கட்டுப்பாட்டை இழந்தது 
 
இதனை அடுத்து இந்த விமானத்தை தேடும் பணி நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன்னர் நேபாளத்தில் மாஸ்டாங் அருகே கோவாங் என்ற பகுதியில் மாயமான விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து மீட்புக் குழுவினர் விமானம் இருக்கும் பகுதியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
விமானத்தின் முழுமையான நிலைமை குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என சர்வதேச விமான நிலைய தலைவர் தெரிவித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தவறுதலாக வங்கி கணக்குகளில் ரூ.13 கோடி வரவு! – இன்ப அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!