மைக்கேல் ஜாக்சன் தந்தை மரணம்

வியாழன், 28 ஜூன் 2018 (07:37 IST)
உலகப்புகழ் பெற்ற ராப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தந்தை ஜோ ஜாக்சன் நேற்று அமெரிக்காவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89
 
உலகப்புகழ் பெற்ற மைக்கேல் ஜாக்சன் கடந்த கடந்த 2009ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் அவரது தந்தை ஜோ ஜாக்சன் நேற்று அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மரணம் அடைந்தார். கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஜோ ஜாக்சன், சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார்.
 
மைக்கேல் ஜாக்சன் உள்பட 11 குழந்தைகளுக்கு தந்தையான ஜோ ஜாக்சன், மைக்கேல் ஜாக்சன் இருந்தவரை அவருக்கு மேனேஜராக இருந்தவர். பலமுறை மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சையின் மூலம் பிழைத்து வந்த ஜோ ஜாக்சனால் புற்றுநோயை வெல்ல முடியவில்லை. ஜோ ஜாக்சனின் மறைவிற்கு அமெரிக்காவின் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பாமகவுக்கு போட்டியாக உருவாகும் 'வன்னியர் சங்கம்'?