Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காசாவில் நாளையே போரை முடிச்சிடலாம்.. அதுக்கு இதை செஞ்சாகணும்! - இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு!

Advertiesment
Benjamin Netanyahu

Prasanth K

, திங்கள், 11 ஆகஸ்ட் 2025 (11:04 IST)

காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இவற்றை செய்தால் உடனே போரை நிறுத்திக் கொள்ளலாம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பேசியுள்ளார்.

 

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த சில ஆண்டுகளாக போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் இறந்துள்ளனர். தற்போது காசாவில் மக்கள் பசி, பஞ்சத்தில் வாடும் நிலையிலும் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது குறித்து உலக நாடுகள் பல கவலை தெரிவித்து வருகின்றன.

 

இந்நிலையில் போர் நிறுத்தம் குறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு “காசா பகுதியில் பொதுமக்கள் பலியாவது, பசி பட்டினி, நிவாரண பொருட்கள் கிடைக்காதது என அனைத்திற்குமே ஹமாஸ்தான் காரனம். காசா மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கையை விரைவில் முடிக்க உள்ளோம். ஹமாஸை ஒழித்துக்கட்டுவதை தவிர வேறு வழியில்லை.

 

காசாவை ஆக்கிரமிப்பதற்காக நாங்கள் போர் செய்யவில்லை. ஹமாஸிடம் இருந்து விடுவிக்கதான் போர் செய்கிறோம். நிறைய வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களை அழைத்து வந்து காட்டுமாறு இஸ்ரேல் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். ஹமாஸ் இயக்கத்தினர் பணய கைதிகளை விடுவித்து விட்டு, ஆயுதங்களையும் ஒப்படைத்தால் நாளையே காசாவில் போர் முடிந்துவிடும்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலை முதலே டெல்டாவை குறி வைத்த மழை! இன்று எங்கெல்லாம் மழை? - வானிலை ஆய்வு மையம்!