உலகின் வல்லரசு நாடான ரஷ்யா மிகச்சிறிய நாடான உக்ரைன் மீது போர் தொடுத்துவருகிறது.
உலக நாடுகள் விரும்பாத இந்தப் போர் 40 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இ ந்நிலையில், உக்ரைன் போர் தொடர்பாக மாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினை சந்திக்க விரும்புவதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போப் பிரான்சிஸ் கூறியுள்ளதாவது:
உக்ரைன் போர் தொடர்பாக மாஸ்கோவின் புதினை சந்திக்க தயாராக இருப்பதக 20 நாட்களுக்கு முன்னதாக தபால் அனுப்பினேன்.
அதற்கு இன்னும் பதில் வரவில்லை; ஆனால் புதின் இந்தச் சந்திப்பை விரும்பவில்லை என தெரிகிறது.
நான் உக்ரைனில் கீவ் செல்லவில்லை. முதலில் செல்ல வேண்டிய இடம் மாஸ்கோ, முதலில் புதினை சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.