அரசுக்கு எதிராக 2 நம்பிக்கையில்லா தீர்மானங்கள்: சரத் பொன்சேகா கட்சி அதிரடி
இலங்கை அரசுக்கு எதிராக 2 நம்பிக்கையில்லா தீர்மானங்களை சரத்பொன்சேகாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அளித்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இலங்கையில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் இதனை அடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்து சரத் பொன்சேகாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அரசுக்கு எதிராக இரண்டு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் அளித்துள்ளது
அரசு மற்றும் அதிபருக்கு எதிராக இரண்டு தீர்மானங்களும் சபாநாயகருடன் அளிக்கப்பட்டுள்ளது அடுத்து இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது