13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

Mahendran
புதன், 3 டிசம்பர் 2025 (16:51 IST)
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர், கடுமையான சட்டங்கள் மற்றும் மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், 9 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரை கொன்ற மங்கள் கான் என்ற குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
 
நேற்று கோஸ்ட் நகரில் உள்ள ஒரு மைதானத்தில், பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சுமார் 80,000 பொதுமக்கள் முன்னிலையில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.
 
பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பாக, அதே குடும்பத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன், குற்றவாளியை துப்பாக்கியால் 5 முறை சுட்டு தள்ளினான். நீதிமன்றம் மன்னிப்பு வழங்க கேட்டபோது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மறுத்து, மரண தண்டனைக்கே வலியுறுத்தியுள்ளனர். தலிபான் அரசு பதவியேற்ற பிறகு இது 11-வது மரண தண்டனை ஆகும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

140 கிமீ வேகத்தில் பைக் சாகசம் செய்த 18 வயது இளைஞர்.. விபத்தில் தலை துண்டாகி மரணம்..!

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம்: திடீரென பின்வாங்கிய மத்திய அரசு.. புதிய உத்தரவு..!

HR88B8888' என்ற நம்பர் பிளேட்டை அதிக தொகைக்கு ஏலம் கேட்டவர் வீட்டில் ஐடி ரெய்டா?

4 ஆயிரம் கோடி எங்க போச்சி?.. மக்கள் மேல அக்கறை இருக்கா?!.. பொங்கிய விஜய்..

அடுத்த கட்டுரையில்
Show comments