Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனிதா மூளை சலவை செய்யப்பட்டு தற்கொலை செய்துள்ளார்: கிருஷ்ணசாமி வீசும் புதிய குண்டு!

அனிதா மூளை சலவை செய்யப்பட்டு தற்கொலை செய்துள்ளார்: கிருஷ்ணசாமி வீசும் புதிய குண்டு!

Advertiesment
அனிதா மூளை சலவை செய்யப்பட்டு தற்கொலை செய்துள்ளார்: கிருஷ்ணசாமி வீசும் புதிய குண்டு!
, வியாழன், 7 செப்டம்பர் 2017 (12:08 IST)
அனிதா மரணம் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, மூளை சலவை செய்யப்பட்டதால் தான் அனிதா தற்கொலை செய்துகொண்டதாக தற்போது புதிய குண்டை வீசியுள்ளார்.


 
 
நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு அவரது தற்கொலைக்கு காரணமில்லை. வேறு காரணங்களுக்காக அனிதா தற்கொலை செய்திருக்கலாம். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி முன்னர் கூறியிருந்தார்.
 
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தினர். கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி கிருஷ்ணசாமியை சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
 
இதனையடுத்து நேற்று முன்தினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அனிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.
 
இந்நிலையில் கிருஷ்ணசாமி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது பேசிய அவர், அரியலூர் மாணவி அனிதா மூளை சலவை செய்யப்பட்டுதான் தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. சிபிஐ அல்லது விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டால் இந்த ஆதாரங்களை சமர்ப்பிக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வடகொரியா மீதான புதிய தடை: அமெரிக்காவின் முடிவுக்கு ஒப்புதல் அளித்த ஐநா!!