Publish Date: Mon, 03 Feb 2020 (08:08 IST)
Updated Date: Mon, 03 Feb 2020 (12:07 IST)
லண்டனில் கையில் கத்தியுடன் சென்ற நபர் வீதிகளில் நடந்து சென்றவர்களை எல்லாம் கத்தியால் குத்திய சம்பவம் லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கையில் கத்தியோடு உலாத்திக் கொண்டிருந்த ஒரு மனிதர் வீதியில் சென்று கொண்டிருப்பவர்களை எல்லாம் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் பலர் படுகாயமடைந்தனர். இதனால் மக்கள் பீதியடைய போலீஸாருக்குத் தகவல் சொல்லப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த ஸ்காட்லாந்து போலிஸார் அந்த நபரை சுட்டுக்கொலை செய்தனர். கத்தியால் குத்தப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட நபர் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளவர் என்றும் இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் எனவும் போலிஸார் சந்தேகிக்கின்றனர்.