Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹாரன் அடிக்கும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை போலீஸ்!

Advertiesment
ஹாரன் அடிக்கும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை போலீஸ்!
, ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (15:02 IST)
சாலையில் செல்லும் போது திடீரென சிக்னலில் ரெட் விழுந்தால் அனைத்து வாகனங்களும் க்ரீன் சிக்னல் விழும் வரை நிறுத்தியே ஆகவேண்டும் என்பது தெரிந்ததே. ஆனால் ஒருசிலர் க்ரீன் சிக்னல் விழும்வரை பொறுமை காக்காமல் தேவையில்லாமல் ஹாரன் அடிக்கும் பழக்கத்தில் உள்ளனர். இதற்கு மும்பை காவல்துறையினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
 
மும்பை போக்குவரத்து போலீசார் ‘தி பனிஷிங் சிக்னல்' என்ற பெயரில் புது திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். இதன்படி டிராபிக் சிக்னல்களுடன் புதிய டெசிபல் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் சிக்னல்களில் க்ரீன் விளக்கு எரியும் முன் அடிக்கப்படும் ஹாரன்களால் டெசிபல் அளவு 85 க்கு மேல் சென்றால், உடனே சிக்னலில் உள்ள வினாடிகளின் நேரம் அதிகரித்துவிடும். அதாவது க்ரீன் சிக்னல் வர 15 வினாடிகள் இருக்கின்றது என்றால் யாராவது ஹாரன் அடித்தால் உடனே 90 செகண்டுகளாக மாறிவிடும். எனவே மேலும் சில நிமிடங்கள் நாம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்
 
இதனால் தற்போது புதிய டெசிபல் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்களில் க்ரீன் சிக்னல் விழும் வரை யாரும் ஹாரன் அடிப்பதில்லை. இந்த முறையை மும்பையின் பிற இடங்களிலும் நாடு முழுவதிலும் விரிவுபடுத்த ஆலோசனை செய்யபப்ட்டு வருகிறது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குறைகள் உள்ள பட்ஜெட் – விஜயகாந்த் அறிக்கை !